முதற்பக்கம் | தொடர்புகொள்ள| இக்னா பற்றி
   19:52 GMT  மொத்தச்செய்திகள்: 0
தேடல்:
தலைப்புகள்

செய்தித் தலைப்பை

அடையும் வழி

சேவைகள்
பிற இணையங்கள்
உங்கள் கருத்து
செய்தி அனுப்புதல்
அல்குர்ஆன் முழுவதும்
 
 
இறைநாமம் போற்றி

 
இக்னா. ஆன்மீகம் நோக்கிய ஓர் அலை
 
அறிமுகம்
ஈரானிய குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா), குர்ஆனியத் துறையில் சர்வதேச மட்டத்தில் முதன்மையானதும் தன்னிகரற்றதுமான செய்தித் தாபனமாகும். நமது முயற்சி, ஈரானிலும் ஏனைய உலக நாடுகளிலும் உள்ள அரசியல், இலக்கியம், கலை, கலாசாரம், சமூகம்ரூஆபவ் மற்றும் சிறுவர், இளைஞர் சார்ந்த அல்குர்ஆன் நிகழ்வுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வழங்குவதும் அவற்றை குர்ஆனிய நிழலில் பகுப்பாய்வு செய்வதும் ஆகும்.
வரலாறு:

இக்னா செய்தி நிறுவனம் ஹிஜ்ரி 1424 றமழான் மாதம் 15ம் நாள் (நவம்பர் 11, 2003) அப்போதைய ஜனாதிபதி செய்யித் முஹம்மத் காத்தமி, இஸ்லாமிய வழிகாட்டல் கலாசார அமைச்சர் மஸ்ஜித் ஜாமியி, பல்கழைக் கழக உபவேந்தர்கள் மேலும் குர்ஆனிய ஆர்வலர்கள் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இக்னா நிர்வாகம் இறையுதவியால் அல்குர்ஆனின் வழிகாட்டலுடன் மறைந்த இமாம் கொமெய்னி அவர்களதும், புரட்சித் தலைவரதும் தியாகிகளதும் அடிச்சுவட்டில் பணியாற்ற உறுதிபுகொண்டுள்ளது.
நோக்கம்:
1. சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களிலும் குர்ஆனின் கலாசாரத்தைப் பரப்புதலும் மேம்படுத்தலும்
2. தேசிய சர்வதேச மட்டத்திலான அல்குர்ஆன் சம்பந்தமான செய்திகளைத் திரட்டி வழங்குதல்
3. பலதரப்பட்ட துறைகளில் குர்ஆனிய செய்திகளைத் திரட்டுவதும் அவற்றைப் பரப்புவதும்
4. சமூக, இலக்கிய, கலை, கலாசார, அரசியல், அறிவியல் விவகாரங்கள் பற்றிய குர்ஆனிய நோக்கை மேம்படுத்தல்.
5. ஈரான் இஸ்லாமியக் குடியரசில் நிலவும் குர்ஆனிய சூழலை ஏனைய இஸ்லாமிய சமூகங்களுக்கும் எத்திவைத்தல்.
6. பலதரப்பட்ட சமுதாயங்களுக்கு மத்தியில் அல்குர்ஆன் பற்றிய அறிவை முன்னேற்றல்.
7. இத்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிகரமான அனுபவங்களை தேசிய, சர்வதேச மட்டத்தில் பகிர்ந்துகொள்ளல்.
8. அல்குர்ஆனின் நிழலில் பல்வேறு துறைகளில் கலாசார, சிந்தனை செல்நெறிகளை உருவாக்குதல்.
பணிகள்:
1. பல்வேறு துறைகள் சம்பந்தமான செய்திகள், நேர்காணல் போன்றவற்றை அன்றாடம் தொகுத்து வழங்குதல்.
2. புத்திஜீவிகள் மத்தியில் ஆய்வு அமர்வுகளையும் உரையாடல்களையும் ஏற்பாடு செய்தல்.
3. இக்னாவின் பாரசீக மொழியிலான ராயிஹா எனும் இருவார சஞ்சிகையை வெளியிடுதல்.
4. அல்குர்ஆன் சம்பந்தமான நிகழ்வுகளுக்கு  தேசிய, சர்வதேச ஊடகங்கள் வழியாக முழுமையான பிரசாரத்தை வழங்குதல்.

5. செய்தி ஆக்கப் பணியில் மிக முக்கிய செயற்பாடாக துறைசார் ஆய்வமர்வுகளை இக்னா நடாத்தி வருகிறது. பல்வேறு செய்திச் சேவைகளால் அவரவரது துறைகளோடு சம்பந்தப்பட்ட ஆய்வுகளை துறைசார் நிபுணர்கள் மற்றும் சிந்தனையார்களின் பங்களிப்போடு இவை நடாத்தப்படுகின்றன. இந்தப் பின்னணியில் 1990 ம் ஆண்டு வரையான ஐந்தாண்டு கால சாதனையாக இக்னாவின் 30 உள்ளூர்க் கிளைகள் வெளிநாட்டுக் கிளைகள் மற்றும்  35 மொழிகள் என்பவற்றின் செயற்பாடு மூலம் 1200 செய்தியாக்கள் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
*** குர்ஆனிய செயற்பாடுகளின் மையமாகத் திகழும் இச்செய்தித் தாபனத்தின் இன்னுமோர் அங்கம் கௌரவ செய்தியாளர் பிரிவாகும். உலகளாவிய மட்டத்தில் இப்பிரிவில் இக்கௌரவ அங்கத்தினர்களாக இணைந்து கொள்வோர் நாளாந்தம் தொடர்ச்சியாக செய்திகளை வழங்கி வருகிறார்கள். மாண்புமிகு ஆன்மீகத் தலைவர் தற்போதைய மற்றும் முன்னால் ஜனாதிபதிகள் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்களும் இப்பிரிவில் கௌரவ செய்தியாளர்களாக அங்கத்துவம் வகிப்பது இப்பிரிவுக்குக் கிடைத்த பெருமையாகும்.
*** குர்ஆனிய செய்திகளைத் தாங்கிய சிறப்பு சஞ்சிகையான ராயிஹா (இக்னா)  ஈரானிய குர்ஆன் செய்தி நிறுவனத்தின் வெளியீட்டுப் பணிகளில் முக்கியமான ஒன்றாகும். பல்வேறு செய்திப் பிரிவுகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைப்புகளிலும் ஆய்வுக்குட்படுத்தப்படும் விடயங்களைத் தொகுத்து அச்சு வடிவில் வழங்கும் முயற்சியே இச்சஞ்சிகை வெளியீடு. இதை இன்னும் இலகு நடையில் சொல்வதாயின் இச்செய்தி நிறுவனத்தின் இலட்சியங்களின் வீச்சுக்குள் உலகின் அனைத்து மக்களுக்கும் ஆன்மீக உலகுக்கான வாயில்களை இது திறந்து விடுகிறது எனலாம். எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் இவ்வுயரிய இலட்சியத்தை அடைந்து கொள்ள முடியும் என்பது நமது நம்பிக்கை.

E-Mail: intl@ikna.ir
2003 - 2012 சர்வதேச குர்ஆன் செய்திகள்.